SIVAKASI WEATHER
சிவகாசி தொகுதியில் 210 வாக

10-03-2011
சிவகாசி தொகுதியில் 210 வாக்குச் சாவடிகள்

சிவகாசி, மார்ச் 9: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில், வரும் சட்டப்பரவைத் தேர்தலுக்கு 210 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் சி. முனுசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: சீரமைக்கப்பட்ட சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள்- 1,73,851. இதில் 86,326 ஆண் வாக்காளர்கள். 87,525 பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 206 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 210 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதில் 10 வாக்குச் சாவடிகள் பெண்கள் மட்டுமே வாக்களிக்க அமைக்கப்பட உள்ளன. சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் 27 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு, தேர்தலின்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட&#

News & Events
top