SIVAKASI WEATHER
T.Vanaraja DMK candidate - Election 2011 Sivakasi Assembly constituency

01-04-2011
தி.மு.க. வேட்பாளர் பிரசாரம்

சிவகாசி, மார்ச் 30: சிவகாசி திமுக வேட்பாளர் டி.வனராஜா ஹவுசிங் போர்டு, சாமிநத்தம், வேண்டுவராயபுரம், கோப்பையநாயக்கன்பட்டி, மாலையூரணிபட்டி, காந்திநகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, ஆனையூர், ராமச்சந்திராபுரம், பெரியபொட்டல்பட்டி, ஏ.துலுக்கபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

சிவகாசி தொழில் நகராக உள்ளது. நான் வெற்றி பெற்றால் இங்குள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களைப் பாதுகாக்கவும், அதன் தேவைகளை அறிந்து நிறைவேற்றவும் பாடுபடுவேன்.

தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பேன். இ.எஸ்.ஐ. மருத்துவமனையை தரம் உயர்த்தவும், அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

News & Events
top