SIVAKASI WEATHER
News & Events
Support DMK - Kani Mozhi - Election 2011

11-04-2011
மக்கள் நலத் திட்டங்கள் தொடர தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்: கனிமொழி

சிவகாசி, ஏப். 8: மக்கள் நலத்திட்டங்கள் தொடர தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள் என கனிமொழி எம்.பி. கூறினார்.

சிவகாசி தி.மு.க. வேட்பாளர் த.வனராஜாவை ஆதரித்து அவர் வியாழக்கிழமை இரவு திருத்தங்கல், சிவகாசியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த தேர்தலில் கூறியவைகளை நிறைவேற்றியுள்ளார் கருணாநிதி. இந்தத் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ள திட்டங்களை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

தேர்தல் அறிக்கையில் திருமண உதவித் தொகை அதிகரிக்கப்படும், கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்படும் எனப் பல நலத்திட்டங்கள் கூறப்பட்டுள்ளன.

58 வயது ஆனவர்களுக்கு இலவச பஸ் பாஸ், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக 35 கிலோ அரிசி எனப் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் தொடர தி.மு.க. கூட்டணியை ஆதரியுங்கள்.

இப்பகுதிதியில் பட்டாசு, த

News & Events
top