SIVAKASI WEATHER
Free bone test camp in Sivakasi - Alagan Sugalayam 2011

05-05-2011
மே 7 இலவச எலும்பு கனிமச்சத்து பரிசோதனை முகாம்

சிவகாசி, மே 4: சிவகாசி அழகன் சுகாலயம் மற்றும் வாசுஹெல்த் கேர் மையம் ஆகியவை இணைந்து மே 7 ஆம் தேதி (சனிக்கிழமை) சிவகாசியில் இலவச எலும்பு கனிமச்சத்து பரிசோதனை முகாமினை நடத்த உள்ளன.

இதுகுறித்து முகாம் நடத்தும் டாக்டர் எஸ்.பி. ஜெய்சங்கர் கூறியதாவது:

மூட்டு வலி, கை, கால் வலி, கழுத்துவலி, முதுகுவலி, எலும்புதேய்மானம், முதுகுதண்டு வளைந்து காணுதல் ஆகியவற்றால் அவதிப்பட்டால், அது எலும்பு தேய்மானமாக இருக்கலாம்.

இவை கால்சியம் மற்றும் மினரல் சத்து உடம்பில் குறைந்து இருப்பதால் வருகிறது. எனவே, இது குறித்து இலவசப் பரிசோதனை முகாம் நடத்த உள்ளோம். தற்போது பெரும்பாலோனோர் ஏதானும் ஒரு வலியால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எனவே எலும்பின் வலுவை கண்டறியும் விதமாக முகாம் நடைபெற உள்ளது.இது குறித்து மேலும் விபரம் பெற 04562-225490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

News & Events
top