SIVAKASI WEATHER
மக்கள் மொழியை அறிமுகப்ப&

29-01-2011
மக்கள் மொழியை அறிமுகப்படுத்தியது தொல்காப்பியம்

சிவகாசி, ஜன. 28: மக்கள் மொழியை அறிமுகப்படுத்தியது தொல்காப்பியம். எனவே இதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்று மனோண்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவர் சு.அழகேசன் கூறினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் பத்துப்பாட்டும், இலக்கிய மரபுகளும் என்ற ஆய்வரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் அழகேசன் தொடக்க உரையாற்றிப் பேசியதாவது:

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் இதுபோன்ற பல கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் தொல்காப்பியத்தைப் படிக்காதவர்கள் கூட அதைப் படிக்கிறார்கள். இது தமிழுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும்.

கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம் ஆகிய இலக்கியங்களில் இருந்து மாறுபட்டது சங்க இலக்கியம். இந்த இலக்கியம் மக்களைப்பற்றி பேசுகிறது. நாட்ட

News & Events
top