SIVAKASI WEATHER
Abdul Kalam to visit PSR Engineering College Sivakasi

25-06-2011
மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு அப்துல் கலாம் நாளை வருகை

சிவகாசி, ஜூன் 24: மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சிவகாசியில் உள்ள பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஜூன் 26-ம் தேதி வருகிறார். இது குறித்து இக்கல்லூரியின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி கூறியதாவது:

சிவகாசி-சங்கரன்கோவில் சாலையில் செவல்பட்டியில் உள்ள பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரிக்கு ஜூன் 26-ம் தேதி மாலை 5 மணி அளவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வருகிறார். கல்லூரி கலையரங்கத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள், பி.எஸ்.ஆர். ரெங்கசாமி மகளிர் பொறியியல் கல்லூரி மாணவிகள், பி.எஸ்.ஆர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், பி.எஸ்.ஆர். கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க உள்ளĪ

News & Events
top