SIVAKASI WEATHER
Blood donation camp in Sivakasi 2011

13-07-2011
ரத்த தான முகாம்

சிவகாசி, ஜூலை 9: சிவகாசி சுகாதார மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை மற்றும் காமராஜர் ரத்த தானக் குழு ஆகியன இணைந்து, சிவகாசியில் ஜூலை 10-ம் தேதி, ரத்த தான முகாமினை நடத்த உள்ளதாக, சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னை வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ரத்த தான முகாம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

News & Events
top