SIVAKASI WEATHER
ஸ்மார்ட் கார்ட் சொருகலாம் மினரல் வாட்டரை பருகலாம் : சிவகாசி அருகே கலக்கல் கிராமம்

10-06-2017
சிவகாசி:சிவகாசி அருகே பொதுமக்கள் கார்டு செலுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து பயன்படுத்துகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கல்லமநாயக்கன்பட்டியில், கிடைக்கும் தண்ணீர் உப்பாக இருப்பதால் பொதுமக்களால் குடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் தனியார் நிறுவனத்தின் உதவியுடன், சுமார் ரூ.7 லட்சம் செலவில் ஊரில் ‘மினரல் வாட்டர் பிளான்ட்’ அமைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கலாம். அனைத்து குடும்பத்திற்கும் தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டை மினரல் வாட்டர் பிளான்ட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கியில் செலுத்தினால், கீழே உள்ள குழாயில் தண்ணீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தண்ணீரை பிடித்துக் கொள்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘குடிநீருக்காக அரசிடம் கோரிக்கை விடுத்து, காத்திருப்பதை தவிர்த்து, நாங்களே வாட்டர் பிளான்ட் அமைத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற்று வருகிறோம்’ என்றனர்.


News & Events
top