SIVAKASI WEATHER
பட்டாசு தொழில்

20-04-2018
சிவகாசியிலிருந்து திரு.மீனாட்சிசுந்தரம் எழுதுகிறார்;

பட்டாசு தொழிலால் யாருக்கும் பயனில்லை...ஆதலால் இந்த தொழிலை தடை செய்திட வேண்டும் என பிதற்றும் தமிழகத்தின் அதி புத்திசாலிகளுக்காக எழுதப்பட்டது..

விபத்து நடந்தால் விபத்துக்கான காரணங்கள், இனி நடக்காமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவது தான் புத்தசாலிதனமே தவிர தொழிலை தடை செய்வது அல்ல...பட்டாசு தொழிலை தடை செய்து சுற்றி உள்ள 5 லட்சம் மக்களுக்கு உங்களால் வேலை வாய்ப்பை தர முடியுமா?? சிவகாசி முழுவதும் பட்டாசு தொழில் நடக்கவில்லை...ஆனால் அது ஒரு உணவுசங்கிலி போன்ற அமைப்பு. பட்டாசு எனும் ஒரு கண்ணி அறுந்து விட்டால் சிவகாசி எனும் மாபெரும் தொழில் நகரம் காணாமல் போய் விடும். ஒரு தீபாவளி மழையின் காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டால் அதன் பாதிப்பு சிறு பெட்டி கடைகளிலும் இருக்கும்..இதை சிவகாசி மக்களாகிய நாங்கள் உணர்ந்திருக்கிருக்கின்றோம்.

உங்களால் எங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அரசு மற்றும் அதிகாரிகளை அழைத்து வர முடியுமா என்று பாருங்கள் இல்லையா பேசாமல் நின்று கொள்ளுங்கள்...

தினமும் ஆயிரக்கணக்கான சாலை விபத்துகள் நடப்பதால் சாலை போக்குவரத்தை தடை செய்தீர்களா நீங்கள்???? பாதுகாப்பான பயணத்தை உறுதி படுத்த தேவையான நடவடிக்கைகளை தானே எடுத்தீர்கள்..அது போல செயல்படுங்கள்.

உதவி செய்யாவிட்டாலும் சரி எங்களுக்கு உபத்திரவம் செய்யாதீர்கள்.

Photo: DStudios


News & Events
top