SIVAKASI WEATHER
சிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி

02-09-2018
சிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி

விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நாட்டு விதைகளின் பெருமைகளையும், பயன்பாடுகளையும் தெரிவிக்கும் முயற்சியில் தேன்கனி கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. இயற்கை வழி விவசாயத்தை அனைத்து தரப்பினரின் மனதிலும் விதையாக விதைத்த நம்மாழ்வாரின் ஒவ்வொரு பிறந்தநாளும் ”விதை நாளாக“ வானகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நாட்டு விதைகளின் பெருமைகளையும், பயன்பாடுகளையும் தெரிவிக்கும் முயற்சியில் தேன்கனி கூட்டமைப்பு ஈடுபட்டு வருகிறது. அதனை தொடர்ந்து, விதைகளை பரவலாக்கும் “பாரம்பரிய நாட்டு விதைக் கண்காட்சி“ வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி சிவகாசியில் நடைப்பெற உள்ளது. வறட்சியைத் தாங்கும் மானவாரி கருந்தானிய விதைகள், பாரம்பரிய நாட்டுக் காய்கறி, கீரை விதைகள், கால்நடைகளுக்கான தீவன விதைகள், மானாவரிப் பயறு வகைகள், பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாயப் பணிகளை எளிமைப் படுத்தும் பண்ணைக் கருவிகள், மாடித் தோட்டப் பைகள் ஆகியவை இக்கண்காட்சியில் இடம் பெற உள்ளன.

மேலும், இயற்கை வழி விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளை கண்காட்சிப்படுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விதைப்பகிர்வாக மறந்து போன காடைக்கன்னி கருந்தானிய விதையும், காட்டுக்கம்பு விதையும் விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.

கண்காட்சி நாள் :

1-9-2018 சனிக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை
இடம் : ராக்லாண்ட் பள்ளி, SCMS பள்ளிபின்புறம்,
சாட்சியாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு,
சிவகாசி. விருதுநகர் மாவட்டம்
மேலும் விபரங்களுக்கு -
9443575431, 9655437242 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்


News & Events
top