SIVAKASI WEATHER

27-12-2018
கண்ணீரில் மூழ்குதே எம் கந்தகபூமி

வெயிலில் வியர்வை கூட வெளியேற முடியாமல் தவிக்கும்
மேனி எங்கும் சாயம் போல் படர்ந்திருக்கும் அந்த மருந்தினால்..
பிஞ்சுக் கைகள் இங்கு மலர்கள் கொண்டு பூச்சரம் கோர்த்தது இல்லை
மருந்து கொண்டு சரவெடிகளைப் பின்னினர்..
சமையலறையில் சமையல் செய்த கைகளை விட இங்கு சங்கு சக்கரம் செய்த கைகளே அதிகம்..
காகிதங்களில் எழுதிப் படிக்கவில்லை ஆனால் காகிதங்களால் குழாய் சுற்றுவோம் வீடுகள் எங்கும்..
பட்டாசுடனேயே எங்கள் பொழுதுகள் கழிந்தாலும்
நாங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில்லை..
விவசாயம் செய்ய வழியற்று நாங்கள் இங்கு
வெடிகளை செய்கின்றோம்..
பட்டாசு ஆலைகளை மூடிவிட்டால் வறண்ட இப்பூமியிலே விதைக்கவும் வழியில்லாமல் பிழைக்கவும் வழியில்லாமல்
நாங்கள் வாழ்வது எப்படி?
ஊரையே வண்ணமயமான ஒளியால் நிரப்பியவர்கள் வாழ்க்கையில் இன்று ஒளியில்லையே..
எங்கள் கண்ணீர் துடைக்க உங்கள் கரங்கள் நீளுமா..?
இல்லை எங்கள் கண்ணீரில் நனைந்து புகைந்து போகுமா
பட்டாசுகளைப் போலவே எங்கள் வாழ்க்கையும்...??

- விக்கிதப்தி


News & Events
top