SIVAKASI WEATHER
சிவகாசியில் தொடங்கியது பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி

04-07-2019
சிவகாசியில் தொடங்கியது பெரியகுளம் கண்மாய் தூர்வாரும் பணி

சிவகாசி பெரியகுளம் கண்மாய் மற்றும் சிறுகுளம் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. இதில் பெரியகுளம் கண்மாயின் நீர்வரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பால் கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைப்பட்டது. இந்த நிலையில் பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும், கண்மாயை தூர்வாரவும் சிவகாசி பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சிவகாசியில் உள்ள லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம், ஜேசீஸ் சங்கம், பட்டாசு, தீப்பெட்டி, அச்சக உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் பசுமை மன்றம் என்ற புதிய அமைப்பை தொடங்கி பெரியகுளம் கண்மாயை தூர்வார முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கண்மாயை தூர்வார மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு நேற்று பணி தொடங்கியது. இதில் கலெக்டர் சிவஞானம், ஆர்.டி.ஓ. தினகரன், தாசில்தார் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் தொழில் அதிபர்கள் ஏ.பி.செல்வராஜன். ஏ.எம்.எஸ்.ஜி. அசோகன், சோனி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

போட்டோ: திரு. கணேஷ் பாண்டி


News & Events
top