SIVAKASI WEATHER
News & Events
SHNV 125 வது ஆண்டு விழா

20-07-2019
SHNV 125 வது ஆண்டு விழா

சிவகாசியில் நான் படித்த பள்ளியின் 125 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப் படுகிறது. சிவகாசி S.H.N.V. பள்ளி மாணவர்கள் என்று சொல்லிக் கொள்வது விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப் பெருமையான விஷயம். பள்ளிக் கல்வி கற்கிற காலத்திலேயே மாணவர்களுக்கு கலை, இலக்கியம், சேமிப்பு, விளையாட்டு, கைவினை என எல்லாவற்றையும் கற்றுத் தருகிற அற்புதமான பள்ளி. இன்றைக்கு பார்க்கும் போதும் அந்த நினைவுகளால் மனம் சிலிர்த்துப் போனது. பள்ளிப் பருவத்தின் நினைவுகள் எனக்கு என்றுமே சுகமானவை. 125 வருடம் என்பது சாதாரணமான சாதனை அல்ல. ஆனால் ஊரைக் கூட்டி அரசியலாக்காமல் தன் முன்னாள் மாணவச் செல்வங்களான தன் குழந்தைகளை மட்டும் அழைத்து தன் ஆண்டுவிழாவை எளிமையாகக் கொண்டாடிக் கொண்டது எங்களுக்கு எழுத்தறிவித்த இறை.. 125 வருட கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியான தபால் தலை வெளியீட்டு விழா

- Arasun SSAR


News & Events
top