SIVAKASI WEATHER
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி

06-01-2020
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி

கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார். நமக்கு மேல் எப்பொழுதும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்திக்கு பெயர் கடவுள். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வணங்குவர். தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கினால் கஷ்டம் எல்லாம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

கஷ்டங்கள் தீர கடவுளை மனமுருக வேண்டினால் நல்லது நடக்கும். அந்த வகையில் சிவகாசி தேரடி முக்கில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலிலுள்ள சுவாமி தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் புரிகிறார். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிப்படி பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகள், திருவிழாக்கள் பாஞ்ராத்ர ஆகமப்படி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகருக்கு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது. மாதம் தோறும் திருவோண நாளில் அபிஷேகம்,சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா சுவாமி புறப்பாடு, மார்கழியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது.

அர்ச்சகர் வரதராஜன், வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுக்கிறார் ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி . இங்கு ராமர் லஷ்மன், சீதா , ஆஞ்சநேயர், தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதி நிறுவப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கொடிமர திருவிழா , சட்ட தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் அரசு உத்தரவுபடி தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,என்றார். தொடர்புக்கு 98431 72312.


News & Events
top