SIVAKASI WEATHER
சிவகாசி திருவாதிரை திருவிழா 2020

10-01-2020
சிவகாசி திருவாதிரை திருவிழா 2020

சிவகாசியில் திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சிவகாசியில் மார்கழி மாதத்தில் நடராஜர் வீதி உலா வரும் ஆருத்ரா தரிசனம் என்னும் திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இன்று திருவாதிரை திருவிழா நடைபெற்றது. சிவகாசி சிவன் கோயில் முருகன் கோயிலில் இருந்து நடராஜர், சிவகாமி அம்மாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். முன்னதாக கடை கோயிலில் இருந்து பத்திரகாளியம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளினர். மூன்று தேரும் காலை 11 மணிக்கு சிவகாசி தெற்கு ரதவீதியில் நிலை நிறுத்தப்பட்டு ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிவகாசியில் கரும்பு, பனங்கிழங்கு விற்பனை களைகட்டியது. பின்னர் மதியம் 1 மணிக்கு அங்கிருந்து தேர் புறப்பட்டு கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு சிவகாசி டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


News & Events
top