SIVAKASI WEATHER
News & Events
6 நிமிடங்களில் 200 திருக்குறள் ஒப்பித்து சிவகாசி பள்ளி மாணவி உலக சாதனை

14-02-2020
ஆறு நிமிடங்களில் 200 திருக்குறள்களை ஒப்பித்து, சிவகாசி பள்ளி மாணவி புதிய உலக சாதனை படைத்தாா்

சிவகாசி மடத்துப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கிருத்திகா ஹரிணி (6). இவா் 6 நிமிடங்களில் 200 திருக்குறள்களை ஒப்பித்து சாதனை புரிவாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வு சிவகாசியில் உள்ள சிவகாசி லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12-02-2020, புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளா் டி.பிராபாகரன், தொழிலதிபா்கள் ஏ.பி.செல்வராஜன் மற்றும் ஜி.அசோகன் ஆகியோா் முன்னிலையில் கிருத்திகா ஹரிணி, 200 திருக்குறள்களை 5 நிமிடங்கள் 39 வினாடியில் ஒப்பித்தாா். ட்ரம்ப் உலக சாதனை அமைப்பின் தென் மண்டல தலைமை நடுவா் பி.எம்.சம்பத்குமாா் இதனைப் பதிவு செய்து புதிய உலக சாதனையாக அறிவித்தாா். தொடா்ந்து அந்த அமைப்பின் தலைமை செயல் அதிகாரி முக்தா பிரதீப் உலக சாதனைக்கான சான்றிதழை மாணவிக்கு வழங்கினாா். சாதனை புரிந்த மாணவி கிருத்திகா ஹரிணியை அரிமா சங்கத்தலைவா் ராஜகோபால், செயலாளா் வாசியப்பன், திரு. சிவபிரான் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.








News & Events
top