SIVAKASI WEATHER
சிவகாசியில் முக கவசம் அணிந்தால் மட்டுமே பஸ்களில் பயணிகளுக்கு அனுமதி

19-06-2020
சிவகாசியில் முக கவசம் அணிந்தால் மட்டுமே பஸ்களில் பயணிகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் பஸ் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கில் தளர்வு விதித்து கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ்களும், 9-ந் தேதி முதல் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை அரசு விதித்த நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.

சிவகாசி பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக கவசம் இல்லாத பயணிகளை அதிகாரிகள் பயணம் செய்ய அனுமதிப்பது இல்லை. அதேபோல் பஸ் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக சிவகாசி கிளை போக்குவரத்து கழகம் சார்பில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தனியார் பஸ்களிலும், மினி பஸ்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகின்றன. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகையாரெட்டியாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

கட்டுப்பாடுகள் தனியார் பஸ் அனைத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. முக கவசம் இல்லாத பயணிகளை பயணம் செய்ய அனுமதிப்பதில்லை. பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள நாங்களும் கிருமிநாசினியை பஸ்சில் வைத்து பயணிகளை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


News & Events
top