SIVAKASI WEATHER
மண் பானைக்கு என்றுமே மவுசு தான்

19-06-2020
மண் பானைக்கு என்றுமே மவுசு தான்

கோடை முடிந்தும் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்துகிறது. இதனால் கிராமம் மற்றும் நகரங்களில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது.

ஆடு , மாடு, கால்நடைகள் கூட நடமாட்டத்தை குறைத்து எங்காவது நிழலில் ஒதுங்குகின்றன. சாதாரணமாகவே ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது 6 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலத்தில் தண்ணீரின் தேவை இன்னும் அதிகரிக்கிறது. வெயிலில் களைத்த பின்னர் குளிர்ந்த நீரை குடிப்பது என்பது சுகமாக இருக்கும்.

என்னதான் பிரிட்ஜில் வைத்த தண்ணீர் குளிராக இருந்தாலும் மண்பானையில் வைக்கப்பட்ட தண்ணீருக்கு ஈடாகாது. இதனால் தற்போது பெரும்பாலோனோர் மண்பானைகளை வாங்கி தண்ணீர் ஊற்றி பயன்படுத்துகின்றனர். சிவகாசி மாரியம்மன் கோயில் அருகில் மண்பானை கடையில் குழாயுடன்மண்பானை வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்பானை என்றாலே அதன் வடிவம் நமக்கு தெரியும். ஆனால் மக்களை கவர்வதற்காக 'ஸ்டைலாக' மாற்றியுள்ளனர்.

பெரிய பானையிலிருந்து , மண்ணால் ஆன சிறிய ஜக், கூஜா வரை விற்பனை செய்யப் படுகிறது. இதன் விலை ரூ .120 லிருந்து 350 வரை உள்ளது.இதன் விற்பனையார் ஜெயபால்: வெயிலால் விற்பனை அதிகரித்துள்ளது. மண்பானைகள் மட்டுமல்லாது மண்ணால் ஆன சிம்னி விளக்கு, மீன் குழம்பு சட்டி, குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மண்பானை தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் புத்துணர்ச்சிக்காக மக்கள் இதை அதிகம் வாங்குகின்றனர்,என்றார்.

- Dinamalar


News & Events
top