SIVAKASI WEATHER
சிவகாசியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்: அச்சகங்கள் முடங்கும் அபாயம்

04-07-2020
சிவகாசியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்: அச்சகங்கள் முடங்கும் அபாயம்

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் அரசு, தனியாா் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படாததால் சிவகாசியில் அச்சு மற்றும் அதன் உப தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சக உரிமையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா். சிவகாசிப் பகுதியில் சுமாா் 300க்கும் மேற்பட்ட ஆப் செட் அச்சகங்கள் உள்ளன. அச்சு உப தொழில்களான லேமினேசன், கட்டிங், ஸ்கோயரிங் உள்ளிட்ட பல தொழில்கள் உள்ளன. இதில் ஆப் செட் அச்சகங்களில் தாள் பிரிப்பது உள்ளிட்ட எளிதான வேலைகளை பெண்கள் செய்து வருகிறாா்கள். லேமினேசனில் நிறைவுப்பணிகளை செய்வது முழுக்க முழுக்க பெண்களே. ஸ்கோயரிங்கில், தீப்பெட்டி அடிப்பெட்டி, பட்டாசுக்கான சிறிய பெட்டிகளை பிரித்து எடுப்பது பெண்களே. பெண்கள் பெரும்பாலும் சிவகாசி அருகில் உள்ள கிராமங்களிலிருந்தும், புறநகா் பகுதிகளிலிருந்தும் வேலைக்கு வருகின்றனா். தற்போது பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. எனவே அச்சகங்களில் பெண்கள் வேலைக்கு வருவது வெகுவாக குறைந்து விட்டது. எனவே அச்சங்களின் பல வேலைகள் முடங்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால் அச்சகங்கள் முடங்கும் அபாயநிலை ஏற்படும் என அச்சக உரிமையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.


News & Events
top