SIVAKASI WEATHER
கவரும் ஸ்டைலிஷ் ஆடைகள்; அசத்தும் கிராம பெண்கள்

16-07-2020
கவரும் ஸ்டைலிஷ் ஆடைகள்; அசத்தும் கிராம பெண்கள்

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்பது முன்னோர் வாக்கு. மனிதனாகப பிறந்த ஒவ்வொருவரும் தன்னுடைய வருமானத்திற்காக ஏதாவது ஒரு தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும். இன்றயை காலத்தில் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய சொந்த காலிலேயே நிற்கின்றனர். எங்களாலும் முடியும் என ஏதாவது ஒரு வேலையை செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.

குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் செய்கின்ற தொழிலில் தையலும் ஒன்று. ஆண்களும் இத்தொழிலை செய்தாலும் பெண்களுக்கு என உள்ள சுடிதார், பிளவுஸ் உள்ளிட்ட ஆடைகளை பெண்களே தைத்து கொடுப்பதையே பெண்கள் விரும்புகின்றனர். பெண்கள் உடைகளில் ஆரி ஒர்க், எம்பிராய்டரிங் என பல்வேறு ரசனைகள் உள்ளன. இதை புதிது புதிதாக குறைந்த கட்டணத்தில் கற்றும் தைத்தும் கொடுக்கிறார் சிவகாசி விஸ்வநத்தத்தில் மாரீஸ் பெண்கள் தையலகம் நடத்தி வரும் மாரீஸ்வரி.

இவர் கூறியதாவது: மூன்று ஆண்டுகளாக தனியாக கடை வைத்து பெண்களுக்கு தைத்து தருகிறேன். படித்த ,படிக்காத பெண்களுக்கு குறைந்த கட்டணத்தில் கற்று தருகிறேன். சமுதாயத்தில் உழைத்து வாழ பெண்களுக்கு தையல் தொழில் மிகவும் உதவுகிறது. மற்றவர்களை நம்பி இல்லாமல் பெண்களாலும் தன்னம்பிக்கையுடன் வாழ முடியும், என்றார்.

News & Events
top