SIVAKASI WEATHER
Hike in Fireworks raw materials

09-02-2011
மூலப் பொருள்கள் விலை அதிகரிப்பு : பட்டாசு விலை உயர்கிறது

சிவகாசி, பிப். 8: பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுகள் விலை 20 முதல் 30 சதம் வரை உயர வாய்ப்பு உள்ளதாகப் பட்டாசு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

சிவகாசி பகுதியில் சுமார் 650 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் சுமார் 1.50 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் பெரியம்நைட்ரேட் (பச்சை உப்பு) ஒரு டன் ரூ.36 ஆயிரமாக இருந்தது. தற்போது டன் ரூ.52 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. அலுமினியப் பவுடர் ஒரு கிலோ ரூ.12-ல் இருந்து ரூ.16 ஆக உயர்ந்துவிட்டது.

பேக்கிங் செய்யப் பயன்படும் சலபன் பேப்பர், அட்டை குழாய் தயாரிக்கப் பயன்படும் காகிதம் உள்ளிட்டவைகளின் விலையும் உயர்ந்துவிட்டது. தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்ந்துவிட்டது.

இதுபோன்ற பல காரணங்கள

News & Events
top