SIVAKASI WEATHER
News & Events
Sri Kaliswari College - Seminar 2011

15-02-2011
மாணவர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

சிவகாசி, பிப். 14: மாணவர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மதுரை ஹைடெக் அராய் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கேரா கூறினார்.

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மேலாண்மையியல் துறை சார்பில் உலகளாவிய மேலாண்மை சவால்கள், வெற்றி பெறும் உத்திகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்து அவர் பேசியதாவது:

ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் வாசிக்கும் திறனை மேம்படுத்தி, அதன்மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தொழிலும், வாழ்விலும் சவால்களையும், பிரச்னைகளையும் பார்த்து பின்வாங்கக் கூடாது. பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்.

இந்த பாடத்தை இன்றைய தேதிக்குள் படித்து முடித்துவிடுவேன் என திட்டமிட வேண்டும். திட

News & Events
top