Arasan Ganesan Polytechnic College - செஞ்சுருள் திட்ட அ |
28-02-2011 செஞ்சுருள் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சிவகாசி, பிப். 26: தொழில்நுட்பக் கல்வி இயக்க நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் செஞ்சுருள் திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் டி. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட இயக்குநர் வி. சீத்தாராமன் அறிமுக உரையாற்றினார். இளைஞர் நலத் துறை ஆலோசகர் கே. சண்முகம் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும், திட்ட மேலாளர் ஆர்.முத்தையா வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பிலும், நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் முதல்வர் எஸ்.பி.சந்திரன், திட்ட செயல்பாட்டு அறிக்கைகளை எப்படி தயார் செய்வது என்பது குறித்தும் பேசினர். இந்தப் பயிற்சி முகாமில், தென் மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக்குகளின் செஞ்சுருள் திட்ட அலுவலர்கள் 51 பேர் கலந்து கொண்டனர். ஒரு |