Trains from Sengottai - Madurai |
14-03-2011 செங்கோட்டை - மதுரை ரயிலை தினமும் 4 முறை இயக்க வலியுறுத்தல் சிவகாசி, மார்ச் 12: செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் தற்போது தினமும் மூன்று முறை இயக்கப்பட்டு வருகிறது. இதை பயணிகள் நலன் கருதி தினமும் நான்கு முறை இயக்க வேண்டும் என தென்னக ரயில்வே பயணிகள் நலன்ஆலோசனைக் குழு உறுப்பினர் ஏ.பி.செல்வராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தென்னக ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: செங்கோட்டையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் மார்க்கமாக சென்னைக்கு இரவு நேர ரயில் ஒன்று இயக்க வேண்டும். செங்கோட்டை-கோயம்புத்தூர் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை-திருச்சி, செங்கோட்டை-ஈரோடு, செங்கோட்டை-ராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயிலை வாரம் இருமுறை இயக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி வழியாகத் திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும். திருநெல் |