SIVAKASI WEATHER
Sivakasi Building Regulations

19-03-2011
ரூ.10 லட்சத்திற்கு மேல் கட்டடம் கட்டுவோர் அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்

சிவகாசி, மார்ச் 18: ரூ.10 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் கட்டடம் கட்டுபவர்கள் தொழிற்சாலைகள் ஆய்வகத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என சிவகாசி தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் வி.பெரியசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை மற்றும் பணி நிலைமையை ஒழுங்குபடுத்தும் சட்டம் 1996-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம் 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கும் அதிகமான மதிப்பில் கட்டடம் கட்டுபவர்கள் தொழிற்சாலை ஆய்வகத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும். புதிய கட்டடம், வணிகவளாகம், பாலம் ஆகியவற்றைக் கட்டுவோர் தொழிற்சாலை ஆய்வகத் துறையில் சான்று பெற வேண்டும்.

கட்டட உரிமையாளர் மற்றும் கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் ஆகியோர

News & Events
top