SIVAKASI WEATHER
Ban to park vehicles in front of Sivakasi Bus Stand

18-04-2011
சிவகாசி பஸ் நிலையம் முன்பு வாகனங்களை நிறுத்தத் தடை

சிவகாசி, ஏப். 16: சிவகாசி பஸ் நிலையம் முன்பு வாகனங்களை நிறுத்தக் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.

சிவகாசி பஸ் நிலையம் முன்பு இரு சக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்டவை சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்படுகிறது.

மேலும் சென்னை செல்லும் தனியார் பஸ்களை இரவு நேரம் நிறுத்தி, சரக்கு ஏற்றுகின்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும்மேல் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் காவல் துறைக்குப் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீஸรดர் சனிக்கிழமை ஒழுங்குபடுத்தினர். சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களைக் குறிப்பிட்ட இடங்களில்தான் நிறுத்த வேண்டும் எனக் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை செல்லும் தனியார் பஸ்கள் பஸ் நிலையம் முன்பு நிறுத்தி சரக்கு &

News & Events
top