SIVAKASI WEATHER
Mepco Schlenk Engineering College - Library Department 2011 - Reading habits changes life style

25-04-2011
வாசிக்கும் பழக்கம் வாழ்க்கைப் பாதையை மாற்றும்

சிவகாசி, ஏப். 24: வாசிக்கும் பழக்கம் வாழ்க்கைப் பாதையை மாற்றும் என, மதுரை தனியார் நிறுவன அதிகாரி ராஜி பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிவகாசி மெப்கோசிலங் பொறியியல் கல்லூரியில் நூலகத் துறை சார்பில், வாசிப்போர் கழக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது: மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள நூலகத்துக்கு தினசரி சென்று பல்வேறு துறைகள் தொடர்பான நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடங்களைப் படிக்க தனி நேரமும், நூலகத்துக்கு தனி நேரமும் ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சிக்கு கணினி துறைத் தலைவர் பா. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

நூலகர் எம். கணேசன் வரவேற்றார். உதவிப் பேராசிரியர் அ. ராஜேஷ்கண்ணண் நன்றி கூறினார்.

News & Events
top