SIVAKASI WEATHER
Sivakasi Arulmigu Sri Badrakaliamman Kovil - Chithirai Pongal 2011 - Therottam Fest 2011

17-05-2011
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் தேரோட்டம்

சிவகாசி, மே 13: சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரைப் பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

பொங்கல் விழா மே 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி காலை மற்றும் மாலை அம்மன் வீதி உலா நடைபெற்றது. 8-ம் நாள் பொங்கல் விழா நடைபெற்றது.

மறுநாள் கயர் குத்து திருவிழா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News & Events
top