SIVAKASI WEATHER
SFR College - Convocation 2011

01-02-2011
எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி, ஜன. 31: சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரித் தலைவர் என்.ஆர்.கே.ரவீந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் த.சசிரேகா வரவேற்றார்.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.சிவசுப்பிரமணியன் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் 800 பேருக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

மாணவிகள் வாழ்க்கைக்குத் தேவையான கல்விகளை கற்றுக்கொள்ள வேண்டும். படித்த பின்னர் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். அதற்கு தகுந்தாற்போல தங்களது செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் முன்னேறுவதற்கு அனைத்துத் துறையிலும் வாய்ப்பு உள்ளது. எதிலும் உங்களால் முடியும் என நினைத்தால் சாதிக்கலாம் என்றார்.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலாளர் அருணாஅசோக், துணைத் தலைவர் திலகவதி, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ராதா உள்ளிட்

News & Events
top