SIVAKASI WEATHER
5வது தொடரும் வேலைநிறுத்தம்

30-12-2017
5வது தொடரும் வேலைநிறுத்தம்; சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ரூ.60 கோடி நஷ்டம்!

பட்டாசு உற்பத்தியாளர்கள் 5வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியர்கள் மகிழ்ச்சியான தருணங்களில், விழாக் காலங்களில் பட்டாசுகள் வெடித்து மகிழ்வது வழக்கம். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படினும், கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

இந்த சூழலில் கடந்த 2015ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.

இதன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, தகவல் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதைக் கவனித்த பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசுக்கு தடை விதிக்க வாய்ப்பு ஏற்படும் என்று அஞ்சினர்.

இதற்கிடையில் வெளிமாநில பட்டாசு உற்பத்தியாளர்கள் சிவகாசி உற்பத்தியாளர்களிடம் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக 950 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், ரூ.60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


News & Events
top