SIVAKASI WEATHER
சிவகாசி ஆதிதமிழிசையான பறையிசை

28-04-2018
அதிர்வு தமிழிசையகம் :

ஆதிதமிழிசையான பறையிசையை பரவலாக்கவேண்டும முயற்சித்துக்கொண்டிருக்கும் அமைப்புகளில் கடைசியாக தன்னை இணைத்துகொண்ட நிறுவனம் அதிர்வு தமிழிசையகம். சிவகாசியை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. பறையிசையை ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் அனைவருக்கும் எளிய வகையில் கொண்டு செல்கிறது.

தன் முதல் பயிற்சியை சிவகாசி ஸ்டாண்டர்டு ஃபயர் வொர்க்ஸ் மகளிர் கல்லூரியிலும், இரண்டாவது பயிற்சியை மேடாஸ் பள்ளியிலும், மூன்றாவது பயிற்சியை குளோ ஸ்கேட்டிங் அகாதெமியிலும் வழங்கியது. இந்த மூன்று மாணவர்களுமே மேடையேறியுள்ளார்கல். இப்போது கோடைகால சிறப்பு பயிற்சியாக வரும் ஏப்ரல் 30 முதல் மே 6 வரை தினமும் மூன்றரை மணி நேர பயிற்சியாக இரண்டு குழுக்களாக (காலை - மதியம் ) நடைபெறுகிறது.

10 வயதிற்கு மேற்பட்ட விருப்பமுள்ளவர்கள் எவரும் பறையிசை பயிலலாம். பறையிசை பற்றிய வரலாறு, பறையின் வெவ்வேறு வடிவங்கள், பல்வேறு பறையிசை கலைஞர்கள் மற்றும் தமிழிசையின் பலவேறு கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். விருப்பமும் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.

கலை மக்களுக்கானது.

மக்களின் வாழ்விற்கானது.

வாழ்வுகளின் கொண்டாட்டங்களுக்கானது.

- பா. சரவண காந்த்.




News & Events
top