SIVAKASI WEATHER
வாழை இலை ஆட்டுக்கறி

30-04-2018
- மணியன் சேதுபதி

ஞாயிற்றுக்கிழமை ஆச்சுன்னா காலையில ஒரு முக்கியமான வேலை கறி எடுக்குரது.. வார வாரம் என்னதான் அலைஞ்சு திரிஞ்சு எங்க அப்பா கறி எடுத்துட்டு வந்தாலும், அவ்வளவு குறை சொல்லுவாங்க எங்க அம்மா.. இன்னைக்கு அப்பா ஊர்ல இல்லைன்னு நானே கறி எடுக்க போக வேண்டிய சூழ்நிலை.. அட எங்கடா எடுக்குரதுன்னு வண்டிய எடுத்துக்கிட்டு ஒவ்வொரு கடையா நோட்டம் போட்டுகிட்டு போன அப்போ, ஒரு கறிக்கடையில வித்தியாசமா ஒன்னு பார்த்தேன். எல்லா கறிக்கடையிலயும் கருப்பு கலர் கேரி பையிலதான் கறிய மடிச்சு குடுக்குரத பார்த்திருக்கேன். ஆனா அந்த கறிக்கடையில ஒரு வாழை இலை கட்டு இருந்தது. கறிய எடை போட்டு வெட்டி இலையில மடிச்சு குடுத்துட்டு இருந்தாங்க. டக்குன்னு வண்டிய நிப்பாட்டி, அந்த கடைக்கு போனேன். அண்ணே ஒரு அரை கிலோ கறின்னு சொல்லி வெட்ட சொன்னேன். அப்டியே, அவருக்கிட்ட பேச்சு குடுத்தேன், என்ன அண்ணே? வித்தியாசமா கறிய இலையில மடிச்சு குடுக்குரிங்க? ஹோட்டல் காரய்ங்களே வாழை இலைய விட்டு போட்டு பேப்பர்ல சோறு போடுராய்ங்க, நீங்க கறிய இலைய போட்டு மடிச்சு குடுக்குரிங்கன்னு கேட்டேன்.. அவரு, ஆமா தம்பி பிளாஸ்டிக் பையில போட்டு குடுத்தா, காத்து போகாம கறி டேஸ்ட் குறைஞ்சுரும், அது போக ஊருக்குள்ள குப்பைதான் அதிகமாகும், மண்ணுக்கும் கெட்டது. அதான்பா இலையில கட்டி குடுக்குரேன்னு சொன்னாரு. அவரு என்ன படிச்சுருப்பாருன்னுலாம் எனக்கு தெரியாது. ஆனா சுற்றுச்சூழலுக்கு தன்னால முடிஞ்ச நல்லத செய்யனும்னு நெனைக்குர அவரோட எண்ணம் அற்புதமானது. அட நம்ம ஊர ல இப்டி ஒரு மனுசனான்னு நினைக்கும் போது சந்தோசமா இருந்தது. மன நிறைவோட கறிய வாங்கிட்டு, அவர போட்டோ எடுத்துட்டு அண்ணே உங்கள பேஸ்புக்குல போட போரேன்னு சொன்னேன். அட போப்பான்னு சிரிச்சுகிட்டே சொன்னாரு. இந்த மாதிரி மனுசங்கள பாராட்டுரதே ஒரு தனி சந்தோசம்தான்பா.. நீங்களும் அவருக்கு போன் செஞ்சு வாழ்துங்க. முடிஞ்சா அவருகிட்ட போயி அரை கிலோ கறி எடுங்க. நல்ல வெள்ளாட்டங்கறி.

இடம் : சாட்சியாபுரம் அம்மன் ஜெராக்ஸ் எதிர்புரம்.
அவரை பாராட்ட : அழகர்சாமி 97513 73130


News & Events
top