SIVAKASI WEATHER
சிவகாசி சிவன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

12-12-2018
சிவகாசி சிவன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

சிவகாசி சிவன் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை சோமவாரங்களில் சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் செய்தால் நற்பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனடிப்படையில், சிவகாசி சிவன் கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமாவாரமான நேற்று சிவனுக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோயில் மண்டபத்தில் 1,008 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டன. அவைகளின் மத்தியில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சியம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் ஒவ்வொரு சங்குகளிலும் பூக்கள் வைக்கப்பட்டன. சுப்பிரமணிய பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


News & Events
top