SIVAKASI WEATHER
கருப்பசாமி கோவிலின் விமர்சையாக நடைபெற்ற மாசி மாத பொங்கல் திருவிழா

19-02-2020
கருப்பசாமி கோவிலின் விமர்சையாக நடைபெற்ற மாசி மாத பொங்கல் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கருப்பசாமி கோவிலின் மாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கருப்பசாமி கோவிலின் மாசி மாதம் பொங்கல் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின்போது சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக தமிழர்களின் பாரம்பரிய கலையான பாவைக்கூத்து என்றழைக்கப்படும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது.

பொம்மலாட்டத்தின் மூலமாக பல நீதிக் கதைகளும் புராணக் கதைகளும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கலைநயத்தோடு விளக்கியது சிறுவர்களையும் பெரியோர்களையும் கவர்ந்தது .பொம்மலாட்ட நிகழ்ச்சியின் போது ஏராளமானவர்கள் பங்கேற்று பொம்மலாட்டத்தை கண்டு ரசித்தனர்.


News & Events
top