SIVAKASI WEATHER
இயல்பு நிலையில் சிவகாசி

09-05-2020
இயல்பு நிலையில் சிவகாசி

தடை உத்தரவில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் சிவகாசி , திருத்தங்கல் நகரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அதிகளவில் நடமாடினர்.

கொரோனாவால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு தளர்வுகளையும் அளித்துள்ளது. இதை தொடர்ந்து சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் பெரும்பாலான கடைகள் இயங்கின. இதுநாள் வரை திறக்கப்படாமல் இருந்த சிறிய ஜவுளி கடைகள், அலைபேசி கடைகள், எலக்ட்ரிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. இதன் மூலம் சிவகாசி நீண்ட நாட்களுக்கு பின் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.


News & Events
top