SIVAKASI WEATHER
சிவகாசியில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

18-05-2020
சிவகாசியில் குப்பை சேகரிக்கும் வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனைக்கு இணங்க விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மாவட்டம் முழுவதிலும் அனைத்து பகுதிக்கும் சென்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனார். மேலும் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி வருகின்றார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆனையூர் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார். ஆனையூர் ஊராட்சியில் தேவர்சிலை அருகே கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர், ரிசர்வ்லயன் பஸ் ஸ்டாண்ட் வரை கிருமி நாசினியை நடந்து சென்று தெளித்தார். அதனை தொடர்ந்து ஆனையூர் ஊராட்சி, தேவர்குளம் ஊராட்சி, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட 14 குப்பை சேகரிக்கும் வாகனங்களை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் பலராம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிநாராயணன், தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளிமச்சக்காளை, செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகத்சிங்பிரபு, செல்லப்பாண்டியன் இளைஞரணி ஒன்றிய செயலாளர் கே.டி.சங்கர், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர்.கார்த்திக், இளைஞரணி தங்கப்பாண்டியன், இளைஞர் பாசறை வடபட்டி தனுஷ், ஆனையூர் ஊராட்சி செயலாளர் நாகராஜ், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் ராமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


News & Events
top