SIVAKASI WEATHER
திருக்குறளை புதுப்பிக்கும் சிவகாசி இயக்குனர்

01-08-2020
திருக்குறளை புதுப்பிக்கும் சிவகாசி இயக்குனர்

திருக்குறளை எளிதில் புரிய வைக்கவும், மனப்பாடம் செய்யவும் ஒலி ஒளி வடிவில் உருவாக்கி வருகிறார் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்த மனோகர் 66. குறும்பட இயக்குனரான இவர் திருக்குறள் மேல் உள்ள பற்றால் 'குறள் பரதம்' என்ற பெயரில் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.பரதம் கற்ற மாணவிகளை கொண்டு ஒவ்வொரு திருக்குறளுக்கும் தனித்தனியாக நடனம் ஆட வைத்து பதிவு செய்துள்ளார். இந்த பரதத்தின் சிறப்பு என்னவென்றால் திருக்குறளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

இதற்காக தனி அரங்கம் ஏற்பாடு செய்து முறையாக பயிற்சி பெற்ற பரத கலைஞரின் வழிகாட்டுதலில் இம்முயற்சி எடுத்து வருகிறார். பின்னனி இசையுடன் திருக்குறளை கேட்கும் போது மனதில் எளிதில் பதிந்து விடுகிறது. கொரோனா ஊரடங்கால் தற்போது இப்பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இசையுடன் இதுவரை 33 திருக்குறளை உருவாக்கி உள்ளார். ஊரடங்கு பின் முழுவதையும் இதேபோல் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இவரை பாராட்ட 99655 24292.

பள்ளிகளுக்கு 'சிடி'வழங்க முடிவு

தமிழ் மீது எனக்கு தீராத பற்று. அதிலும் திருக்குறள் மீது அதிக பற்று. திருக்குறளை அனைவரிடமும் எளிதில் கொண்டு சேர்ப்பதற்காக இம்முயற்சியை எடுத்துள்ளேன்.' சிடி' பதிவு செய்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கும் கொடுக்க திட்டமிட்டு உள்ளேன். இதுபோல் 'டிவி'சேனல்களிலும் ஒலி பரப்ப உள்ளேன். இதை உருவாக்க சிவகாசி தொழிலதிபர்கள் செல்வராசன், ஆசைத்தம்பி நிதி உதவி அளித்துள்ளனர்.


News & Events
top