SIVAKASI WEATHER
சிவகாசியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தல்

29-10-2020
சிவகாசியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தல்...

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சிவகாசியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இன்று நாள் முழுவதும் வெப்பச்சலனம் அப்படியே இருந்தது. அதனால் இன்று இரவு 7 மணி முதல் சாரல் மழை விட்டு விட்டு மழை பெய்தது. இன்று 7:25 மணியளவில் நல்ல மழை சுமார் 20 நிமிடங்கள் பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. அதே நேரத்தில் வறண்ட காற்றும் ஈரப்பதத்துடன் கூடிய காற்றும் இணைந்து சிவகாசியில் மழையை கொடுக்கும். அடுத்த 7 தினங்களுக்கு சிவகாசியில் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இம்முறை சிவகாசியில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமே அசத்தலாக உள்ளது...


News & Events
top