SIVAKASI WEATHER
34வது வார்டு மக்களும் சிவகாசி மேயரும்

19-03-2022
34வது வார்டு மக்களும் சிவகாசி மேயரும்

சிவகாசியிலிருந்து திரு.ராஜேஷ் எழுதுகிறார்; உள்ளாட்சி தேர்தலுக்கு முன் பல முறை வாக்கு சேகரிக்க வந்தார் எங்கள் பகுதி வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட்டவர். 34வது வார்டில் வெற்றி பெற்ற பின் சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையும் பெற்றார் திருமதி. சங்கீதா இன்பம். வெற்றி பெற்ற பின் வீடு வீடாக சென்று நன்றி தெரிவித்தார். மேயர் ஆன பின் இவர் எங்கு நமது வார்டுக்கு வருவார் என்று மக்கள் நினைத்தனர். ஆனால் மேயர் பதவி ஏற்ற பின் தேர்தலுக்கு வாக்கு சேகரித்ததை விட மிகவும் பணிவுடனும், உத்வேகத்துடனும் காணப்பட்டார், வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்களுக்கு 34வது வார்டில் தென்படுகிறார். அவரது மொபைல் எண்ணை எங்கள் வார்டு மக்களுக்கு தெரிவித்தார். அனைவரது குறையையும் கேட்டறிந்தார். 34வது வார்டில் நடைபெற்ற தெருக்கட்டு பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவரிடம் ஒரு பெண்மணி "பள்ளி செல்லும் என் மகள் மாரியம்மன் கோயில் வழியாக செல்கிறாள், பல மாதங்களாக தோண்டப்பட்ட நிலையில் இருக்கும் இந்த ரோட்டில் செல்வதால் அடிக்கடி மதிய உணவு கீழே சிதறி வீணாகி விடுகிறது. பலருக்கும் இப்படி ஆகிறது, தினமும் பல ஆயிரம் பேர் செல்லும் மாரியம்மன் கோயில் ரோடை சீரமைத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த மேயர், தண்ணீர் குழாய் சீரமைப்பிற்கு ஆங்காங்கே தோண்டப்படுவதால் தாமதம் ஏற்படுகிறது, இந்த பணி விரைவில் உறுதியாக முடிக்கப்படும் என்றார். இவரது பணி சிறக்க வாழ்த்துகிறோம்!


News & Events
top