SIVAKASI WEATHER
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

27-03-2022
சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சிவகாசி மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சிவகாசி பொது மக்கள் வலியுறுத்தல்.

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்ரல் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. ஏப்ரல் 10 ஆம் தேதி பொங்கல் விழாவும், ஏப்ரல் 11 ஆம் தேதி கயிறுகுத்து விழாவும் நடைபெறவுள்ளது. இங்குள்ள பி.கே.எஸ்., ஆறுமுகம் ரோடு சீரமைப்பதற்காக தோண்டப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. தற்போது குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. இதே ரோட்டில் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் குழாய் பதிப்பதற்காகவும் ரோட்டை சிதைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, குழாய் பதிக்கும் பணி முடிவடைந்த பின்னர் தான் சீரமைக்கப்படும் என்கின்றனர்.

பங்குனிப் பொங்கல் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ரோட்டின் வழியாகத்தான் கோயிலுக்கு வருவர். மேலும் அக்கினிச்சட்டி முளைப்பாரி, போன்ற ஊர்வலங்கள் இந்த ரோட்டில் தான் செல்ல உள்ளது. தற்போது சேதமாக உள்ளதால் பக்தர்கள் தடுமாறி கீழே விழ வாய்ப்புள்ளது. இதே ரோட்டின் வழியாக தினமும் செல்லும் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.

பங்குனிப் பொங்கல் திருவிழாவிற்கு சிவகாசி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காலில் செருப்பு அணியாமல் வருவாா்கள். எனவே, மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சிவகாசி பொது மக்கள் விரும்புகின்றனர்.


News & Events
top