SIVAKASI WEATHER
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம்

21-11-2022
சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் ராஜகோபுரம்

சிவகாசியிலிருந்து திரு.ஜெப. ராகு எழுதுகிறார்;

சிவகாசியில் கடந்த ஜனவரி 2022 முதல் பத்திரகாளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணி காரணமாக பிப்ரவரி மாதம் முதல் கோயிலின் 110 அடி ராஜகோபுரம் முழுவதும் பச்சை நிற நெட் துணியால் மூடப்பட்டது. வர்ணம் பூசுவதற்காக ராஜகோபுரம் முழுவதும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு இருந்தது. ராஜகோபுரம் வர்ணம் பூசும் வேலையும் முழுவதுமாக முடிந்தது.

யாரும் எதிர்பாராத வகையில் நவம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணியளவில் பட்டாசு தீ பட்டு ராஜகோபுரம் உச்சியில் தீ பற்றியது. தீ மளமளவென எரிந்தது போல் காட்சியளித்தது. நேரில் பார்த்தவர்கள் அதை படம் பிடித்தனர். தீ பச்சை நிற நெட்டில் எரிந்ததால் தீ பிழம்பு போல் தெரிந்தது. தீயணைப்பு வீரர்கள் அருகே இருந்ததால் உடனே தீயை அணைத்தனர். இந்த புகைப்படத்தை பார்த்தாலே புரியும். சார கம்புகளோ அப்படியே எந்தவித பாதிப்பும் இன்றி இருந்தது. 5 சதவீத பச்சை நெட் மட்டுமே தீயில் எரிந்தது. தீயை உடனே அணைத்த தீயணைப்பு துறையினருக்கு நன்றி.

பலர் இப்படி கேள்வி எழுப்பி வருகின்றனர் "சித்திரைப் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையில் எவ்வளவோ பட்டாசு வெடித்தும் ஒன்றும் ஆகவில்லை? ஏன் இப்போது மட்டும் என்கின்றனர்". சித்திரைப் பொங்கல் நேரமும், தீபாவளி நெருங்கிய வேளை, தீபாவளியன்றும் சிவகாசியில் நல்ல மழை பெய்தது அது பச்சை நெட் துணியை ஈரமாகவே வைத்திருந்ததால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பத்திரகாளி அம்மன் அருளால் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அம்மனை வணங்குவோம்.


News & Events
top