மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் |
26-12-2022 மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் திறந்த சில நாட்களில் இந்த அழகிய புகைப்படத்தை புகைப்பட கலைஞர் திரு.ராம் எடுத்த பொழுது எதிர்முனையில் இருந்து பார்த்தேன், நின்ற நிலையில் பின்னால் சாய்ந்து ரிஸ்க் எடுத்து கிளிக் செய்தார். அவர் எடுத்த விதத்தில் புரிந்து கொள்ள முடிந்தது அந்த புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டிருக்கும் என்று. அவருடன் அறிமுகம் இல்லாததால் சூப்பர் போட்டோவை மிஸ் செய்துவிட்டோம் என்று எண்ணினேன். ஆச்சர்யம் சில தினங்களில் அந்த புகைப்படத்தை சிவகாசி வீக்லி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தார் திரு. ராம் அவர்கள். இதுவரை பலர் இந்த புகைப்படம் போன்று எடுக்க முயன்றும் சரிவர கிளிக் செய்ய முடியவில்லை. பல புகைப்படங்களை தனது வித்தியாசமான கோணத்தில் சிவகாசி வீக்லிக்கு பகிர்ந்து கொண்டிருக்கும் புகைப்பட கலைஞர் திரு. ராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. - சிவகாசி வீக்லி |