SIVAKASI WEATHER
விடுமுறை நாட்களில் சூடு பிடித்த பட்டாசு தொழில்

24-10-2023
விடுமுறை நாட்களில் சூடு பிடித்த பட்டாசு தொழில்

சிவகாசி, சுற்று ப் பகுதியில் ஆயிரக்கணக்கான பட்டாசுஆலைகள் உள்ளன. வெளி மாநில வியாபாரம் பெரும்பாலும் முடிவடைந்த நிலையில் வெளி மாவட்ட வியாபாரம் களைகட்டி வருகிறது. தீபாவளிக்குக் இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பட்டாசு வியாபாரிகள் நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்வதற்காக சிவகாசிக்கு வர துவங்கி உள்ளனர், இதனால் ஓட்டல், டீக்கடை உள்ளிட்டட் வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளது. மேலும் வீடுகளுக்கு தேவையான பட்டாசு வாங்குவதற்கும் வெளிமாவட்டத்தினர் சிவகாசி வந்து பட்டாசுகளை வாங்குகின்றனர். இதனால் சிவகாசி நகர் கடந்த சில நாட்களாக பரபரப்பாக உள்ளது. அடுத்த வாரத்தித் ல் சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் இன்னும் களைகட்டும்.என்று எதிர்பார்க்கப்படுகிறது.


News & Events
top