சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரம் |
11-08-2024 சிவகாசியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரம் சிவகாசியில் தேசியக் கொடி அச்சிடும் பணியும், இதை வெளியூா்களுக்கு அனுப்பும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகாசியில் உள்ள அச்சகங்களில் துணியினாலான தேசியக் கொடி, வரைபட காகிதம், காகித அட்டை, ஆடையில் அணியும் கொடி, இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தும் கொடி, அலுவலகங்களில் மேஜையில் வைக்கும் கொடி என பல வகையான கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், இந்திய வரைபடம், காந்தியடிகள் உருவம், முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு உருவம் பொறித்த தேசிய கொடிகளும், டை கட்டிங், வண்ண காகிதம், ஸ்பாஞ்ச் வகையிலான தேசியக் கொடிகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. |