SIVAKASI WEATHER
Free diabetes check - camp 2011

15-02-2011
சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்

சிவகாசி, பிப். 13: சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம், விஸ்வநத்தம் விஸ்வகர்மா உறவின்முறை ஆகியவை இணைந்து விஸ்வநத்தத்தில் இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடத்தின.

நிகழ்ச்சிக்கு அரிமா சங்கத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார்.

டாக்டர்கள் கணேசமூர்த்தி, உமா சங்கர், ரத்தினமணி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் 117 பேரை பரிசோதனை செய்ததது. தேவைப்பட்டவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விஸ்வர்கர்மா உறவின்முறைத் தலைவர் மரியதாஸ், அரிமா சங்கப் பொருளாளர் தங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செயலாளர் பகவதிகுமார் நன்றி கூறினார்.

News & Events
top