Sivakasi Government Hospital |
17-02-2011 சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூடப்படும் அபாயம் ? சிவகாசி, பிப். 15: ரத்த தானம் வழங்க அனுமதி அளிப்பதில் மெத்தனம் காட்டுவதால் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி அரசு மருத்துவமனையில் 2000-ம் ஆண்டு ரத்த வங்கி அமைக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல ரத்த தானமுகாம்களை நடத்தின. ஆண்டுதோறும் ரத்த தானம் பெறுவதில் சிவகாசி அரசு மருத்துவமனை முதலிடம் வகித்தது. 2010-ம் ஆண்டு 3000 யூனிட் ரத்த தானம் பெறப்பட்டு மாவட்டத்தில் முன்னோடி ரத்த வங்கியாக இருந்தது. இதையடுத்து சிவகாசியில் நண்பர்கள் ரத்த தான குழு என்ற அமைப்பில் சுமார் 1000 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இதையடுத்து சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளுக்கு சிவகாசி ரத்த வங்கி மூலம் ரத்தம் வழங்கப்பட்டு வந்தது. பிரசவ காலங்களில் தேவைப்படுகிறவர்களுக்கு ரத்தம் கிடைத்தத |